Hi Friends,


Every movie deserves to be watched, but the question is when, how, where and with whom??!! “Jackie Cinemas” is the portal to answer all these questions. Whether you're interested in a movie's review, trailer review or its latest news, this is the best place to get the complete picture!

The channel provides exclusive reviews and information of Hollywood Movies, Indian - all language Movies and the World Movies. Good reviews bring awareness and open new doors of getting entertained into next level, thus providing our viewers to get educate, inspire and choose the right one for them.

“Top-10 Review” is one of the unique and exclusive analysis programme that you won’t find easily elsewhere.

Jackie Cinemas – the best portal of all movie related information and the ultimate destination for true movie buffs and film makers!!

For Ad sales opportunities, kindly contact : +91 82488 90359




Jackie Cinemas

கால் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நகரம்... 🫰 உண்மையான நண்பர்களையும்,நம்பிக்கையையும்,காதலையும், காதலிகளையும், சொந்த வீட்டையும், சொந்தக்காரையும், எனக்கான அங்கீகாரத்தையும் கொடுத்த நகரம் ❤️

ரொம்ப சின்ன வயதில் அம்மாவோடு ஏதோ ஒரு சுற்றுலாவில் சென்னைக்கு வந்து சென்று இருக்கிறேன்...

விஜிபியில் வாசலில் முந்திரி மரம் அதிலிருந்து முந்திரி பழம் ஒன்று தரையில் மண்ணில் பிரண்டு கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்... வாசலில் அசையாத மனிதன்...
அண்ணா சமாதி மெரினா பீச்... அவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது...

ஏனெனில் 1987ல் தான் எம்ஜிஆர் மறைந்தார்... அதன் முன்பு டவுசர் போட்ட காலத்தில் பார்த்துவிட்டு சென்று இருக்கிறேன்...அப்போது மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்தன... அதன் பிறகு பச்சை நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டன..

மீசை முளைக்க தொடங்கிய போது
சின்ன வயதில் திரையில் மட்டுமே பார்த்து ரசித்த சென்னை நகரத்தின் மவுண்ட் ரோடு வழியாக பேருந்தில் பயணம் செய்த ஆண்டு.. 1992

ஒரு ஏப்ரல் மாதத்தின் கசகசப்பான புழுக்கத்தினுடைய சென்னை நகரை முதன்முறையாக ரசித்தேன் சுவாசித்தேன்...

நண்பருடைய கடைக்கு மொத்தமாக பொருட்கள் ஆர்டர் செய்வதற்காக சென்னை பூக்கடை பாரிஸ் செல்வதற்காக முதன்முதலாக கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 152 பிடித்து சென்னைக்குள் நுழைந்தது இன்றும் மறக்க முடியாதது...

சென்னைக்கு நீங்கள் உட்கார்ந்து செல்ல வேண்டுமென்றால்... கடலூர் வேல்முருகன் தியேட்டர் எதிரே இருக்கும் டெப்போவில் இருந்து வண்டி வளையும்போதே பேருந்தில் ஏறி விட வேண்டும்...

அப்படி இல்லை என்றால்... கடலூர் பஸ் ஸ்டாண்டில் உள்ளே நுழையும் இடத்தில் முத்தையா தியேட்டர் பேனர் வைத்திருக்கும் இடத்தில் ஒரு வேகத்தடை இருக்கும்... அந்த இடத்தில் பேருந்து ஏறி இறங்க ஸ்லோ செய்யும் அந்த அவகாசத்தில் ஏறி இடம் பிடிக்க வேண்டும்....

அப்போது... மெட்ராஸ் என்று தான் அழைக்கப்பட்டது... கிண்டி ரவுண்டானாவில் நேரு சிலை நடுவில் இருக்கும்.... அப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்படவில்லை...

பேருந்து பூக்கடை பேருந்து நிலையத்திற்கு தான் செல்லும்.... அது கிண்டி ரயில்வே மேம்பாலத்தில் கடக்கும் போது... சிங்காரவேலன் படம் ரிலீஸ் ஆகிறது நேரம்.... மின்விளக்கு கம்பங்களில் சிங்காரவேலன் கமல் சிரித்துக் கொண்டிருந்தார்...

கலைஞரால் கட்டப்பட்ட அண்ணன் மேம்பாலத்தில் பேருந்து ஏறி இறங்கும் போது... சபையர் தியேட்டர் இருந்தது... வாசலில் எங்க வீட்டு வேலன் படத்திற்காக... பிளாஸ்டர் ஆப் பாரிஸில் உருவாக்கப்பட்ட முருகன் சிலைகள் வரிசையாக சிரித்துக் கொண்டிருந்தன...

பூக்கடை பேருந்து நிலையம்... பாரிஸ் கார்னர்.... சென்ட்ரல் ஸ்டேஷன் மவுண்ட் ரோடு எல்ஐசி என்று சென்னை ஒரு பரவசத்தை உண்டு பண்ணியது... சென்னையின் பரபரப்பு இந்த நகரத்தில் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கையை அன்றே எனக்கு கொடுத்தது என்று சொல்லுவேன்...

அடுத்த இரண்டு வருடங்களில் எந்த எல்ஐசி பார்த்து வியந்து போனேனோ... அந்த எல்ஐசி வாசலில் செக்யூரிட்டி வேலைக்கு நின்று கொண்டிருந்தேன்... முதல் முறை சென்னையில் தோற்றுப் போய் விட்டேன்... மூன்று வருடம் கேப் கொடுத்து திரும்பவும் சென்னைக்கு படையெடுத்தேன்... இந்த முறை சென்னை எனக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது 🤣
2000ஆம் ஆண்டில் தான் எனக்கான முதல் விலாசம் வடபழனி குமரன் காலணியில் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் இரண்டு வருட வாசம்... அடுத்ததாக அங்கிருந்து ஆழ்வார் திருநகர் எக்ஸ்டென்ஷன் திருமலை நகர்... அங்கிருந்து ராமபுரம் எஸ்ஆர்எம் கல்லூரி பாரதி சாலையில் முதல் தளத்தில் ஒரு வீடு... அதன்பிறகு ராமாபுரம் நடேசன் நகரில் ஒரு இரண்டு வருடங்கள்... திருமணம் முடிந்த பிறகு வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் மூன்றாவது தெருவில் வாசம்...
அதன் பிறகு போரூர் பாய் கடை கொளப்பாக்கம் மேக்ஸ் ஒரத்த நகரில் சொந்த வீட்டில் வாசம்.. அங்கிருந்து மயிலாப்பூர் நாச்சியப்பன் தெருவில் ஒரு நான்கு வருட வாசம்... அதன் பிறகு ஆழ்வார்பேட்டை பாவா தெருவில் இரண்டு வருட வாசம்... அதன் பிறகு ஆழ்வார்பேட்டை செனட்டப் ரோட்டில் நான்கு வருட வாசம்... இப்போ இங்கிலாந்தில்... டார்லிங்டன்....

சென்னையின் வளர்ச்சி என் கண் முன்னால் வளர்ந்தது... உதாரணத்திற்கு கிண்டி ரவுண்டானாவை தாண்டினால்... வலது பக்கம் பெரிய மதில் சுவர் இருக்கும்... அதில் எவரடி பேட்டரி விளம்பரங்கள் இருக்கும்.... அதன் வழியாகத்தான் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல வேண்டும்....

கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்... எம்ஜிஆர் பிலிம் சிட்டி ஓஎம்ஆர் எல்லாம் அப்போது ஒன்றுமே இல்லை... சரவணா வீடியோவில் வேலை செய்யும்போதுதான்... ஜெயா டிவி இரண்டாவது முறையாக ஆரம்பித்தார்கள்... ஒரு மூன்று மாத காலத்திற்கு அங்கே தான் என் வாழ்க்கை போனது...
அதன் பிறகு வீடியோகிராபர் umatic கேமரா மேன்... போட்டோகிராபர் , கேமரா அசிஸ்டன்ட்... சீரியல்களில் அசிஸ்டன்ட் கேமரா மேன்... வாத்தியார் வேலை... திரும்பவும் சினிமாவில் அசிஸ்டன்ட் கேமரா மேன்... தொலைக்காட்சிகளில் ஸ்க்ரிப் ரைட்டர் ப்ரோக்ராம் புரொடியூசர்... சப் எடிட்டர்... அதன் பிறகு சொந்தமாக youtube சேனல் ஆரம்பித்து ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது...

நான் முதல் முதலாக பாஸ்போர்ட் எடுத்து ஆண்டு 1996... அதற்கு முன்பு வரை மெட்ராஸ் தான்... 1996 கலைஞர் அவர்கள் ஒரு அரசாணை மூலம் மெட்ராஸ் என்னும் நகரத்தை... சென்னை என அழைக்கச் செய்தார்...

சென்னை வளர்ச்சியை அணு அணுவாக பார்த்து ரசித்தவன் என்ற முறையிலும்.... அந்த நகரம் எனக்கான அங்கீகாரத்தை வழங்கிய வகையிலும்... சென்னை நகரத்தை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்.....

லவ் யூ சென்னை ❤️
மிஸ் யூ சென்னை... ❤️
பிரியங்களுடன்
#ஜாக்கிசேகர்.

#madrasday
#chennaiday
#chennaiday385
#chennaiday
#madrasday
#chennaibirthaday
#சென்னை #சென்னைதினம் #நம்மசென்னை

3 days ago | [YT] | 120

Jackie Cinemas

முதல் சந்திப்பிலேயே
கீதாவை... மோகனுக்கு பிடிக்க மிக முக்கிய காரணம்...  கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு விடைகளை சொல்லும் அந்த திறமை தான்...
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் அழகு கவர்ச்சி எல்லாம் இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சம் தான்...

ஆணுக்கு தன்னைவிட புத்திசாலியான பெண்களை மிகவும் பிடிக்கும்... தன்னிடம் இல்லாத ஏதோ ஒரு திறமை அவளிடம் இருப்பதாலேயே ஆண் கிறக்கம் கொள்கிறான்...

அதே நேரத்தில் ஆணின் மனது அவள் எப்போதும் புத்திசாலித்தனமாக இருக்கிறாளா என்பதை செக் செய்து கொள்ளும்...


அணை கட்டும் போது மோகன் கேரவேனில் உட்கார்ந்து கணக்கு போட்டுக்கொண்டு இருப்பான்...
35x35....? கீதாவால் பதில் சொல்ல முடிகிறது...அப்போ 45.7×75.2 சிக்கலாக கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியுமா? என்று  நினைக்கும் போதே அவள் மிக சரியாக பதில் சொல்கிறாள்...மோகன் கண்களில் காதல் தெரியும்... 🥰

மோகனுக்கும் கீதாவுக்கும்.... காவேரி அம்மா மீது ஆசை... காவேரி அம்மாவை  மோகன் தன்னோடு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பப்படுகிறான்.... கீதா தன்னோடு காவேரி அம்மா இருக்க வேண்டும் என்று  மோகனிடம் மன்றாடுகிறாள்...

கீதாவை மோகனுக்கு முன்பே அவர்களுக்குள் நிகழ்ந்த மோதலில்  பிடித்திருந்தாலும்... ஒரு நள்ளிரவில் கேரவனில் இருந்து அவளை பார்க்கும் போதும்... அவளும் அவனை பார்க்கும் போது தான்...காதல் என்ற ஒரு இது தொடங்கும்...

கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் மோகனை எழுப்பி  காவேரி அம்மா சொல்லுவார்...

கீதாவை பெண் பார்க்க வருகிறார்கள் என்று....மோகனுக்கு முதலில் அதிர்ச்சி என்றாலும்.. மாப்பிள்ளை வீட்டார் வந்த பிறகு அவனால் ஒன்றும் சொல்ல முடியாது... புடவை கட்டி வெளிவரும் கீதாவை பார்த்து மோகன் அசந்து போய்விடுவான்...😍
கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும் போது..
மோகன் வெளியே சென்று ஒரு தம் பத்த வைப்பான்....
உள்ளே ஏதோ பேச்சு சத்தம் விவாதமாக மாறியதை கண்டு தம்மை போட்டுவிட்டு கவனமாக உள்ளேசென்று பார்ப்பான்...

மாப்பிள்ளை வீட்டார்.. திருமணத்திற்கு பிறகு கீதா வேலைக்கு செல்லக்கூடாது என்பது அவர்களுடைய திட்டம்... ஆனால் திருமணத்துக்குப் பிறகு நான் கண்டிப்பாக வேலைக்கு செல்வேன் என்பது கீதாவின்  ஆசை அதுமட்டுமல்ல குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதால் நான் பள்ளிக்கு கண்டிப்பாக செல்வேன்... என்று தீர்க்கமாக கீதா சொல்ல  அந்தக் கல்யாணம் நடக்காது என்பது மோகனுக்கு தெரிய ஆரம்பிக்கும்...

மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்... மாப்பிள்ளை வீட்டார் வெளியே கிளம்பும்போது  எல்லோருக்கும்ம மோகன் வணக்கம் சொல்வான்... உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஒரு சோகத்தை மோகன் முகத்தில் வைத்துக் கொள்வான்...

அவனுடைய அப்பாவி தனத்துக்குள் ஒளிந்திருக்கும் அந்த சந்தோஷத்தை கீதா கவனித்து விடுவாள்...

ஓ நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா...உனக்கு அவ்வளவு சந்தோஷமா? என்பதாக அவளின் பார்வை இருக்கும்...

இந்த காட்சிக்கு
ரகுமானின் பின்னணி இசை அவ்வளவு அற்புதமாக இருக்கும்... உதாரணத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றது...? மோகனின் மன சஞ்சலம் அடைவதை எடுத்துக்காட்டுவதாக பின்னனி இசை இருக்கும்...

ஆனால் அதே நேரத்தில்
உள்ளே கல்யாணம் பேச்சு விவாதமாக மாறும்போது... மாப்பிள்ளை வீட்டார் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் போதும், அந்த மகிழ்ச்சிக்கு ஏற்றது போல  பின்னணி இசையில் ரகுமான் கலக்கி இருப்பார்...

இந்த காட்சிக்கும் பின்னணி இசைக்கும் நடிகர்களின்  பங்களிப்பையும் மிக முக்கியமாக மோகன் கதாபாத்திரத்தில் இருக்கும் ஷாருக்கானின்  உள்ளூர சந்தோஷத்தை... கீதா உணரும் தருணமும்... அதன் பின்னணி இசையும்... எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்க ரசிக்க தகுந்த காட்சி அது.... தமிழில் பாபா படத்தில் யூஸ் செய்த பாடலின் ராகத்தை ஸ்வதேஷ் திரைப்படத்தில் யூஸ் செய்திருப்பார் 😊

அப்புறம் மிக முக்கியமான ஒன்று என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்  ஸ்வதேஷ்  திரைப்படம் 😍

அந்த காட்சியின் இணைப்பை இங்கே 👇 கொடுத்திருக்கிறேன்...
https://youtu.be/XGNTn1VI6RI?si=crWa4...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

#swades #srk #arr #arrehman #arrahman #love #bestscene #BGM

5 days ago | [YT] | 38

Jackie Cinemas

எங்க அம்மா ஜெயலட்சுமியோட பழக்கம் அது...

பொரி உருண்டை விற்கும் தாத்தாவிலிருந்து மீன்காரம்மா வரை... யார் வெயிலில் வந்தாலும் தண்ணி கொடுத்து சாப்பாடு போடுவது அம்மாவுடைய வழக்கம்...

சென்னையில் வருடா வருடம் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலில் அலைந்து திரிந்து வீட்டுக்கு, டெலிவரி செய்யும் ஆட்களுக்கு தண்ணீர் கொடுப்பது எங்கள் வீட்டு வழக்கம் தான்....

மனைவி அலுவலகத்திலிருந்து, மதிய சாப்பாடு ஆர்டர் செய்தாலும் கூட , டெலிவரி செய்ய வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க சொல்லி நினைவுபடுத்துவார்...

ஏற்கனவே எங்கள் வீட்டுக்கு யார் டெலிவரி செய்ய வந்தாலும் அவர்களுக்கு பத்து , அல்லது 20ரூபாய் கொடுத்து அனுப்புவது என்னுடைய வழக்கம்...

இந்த 2024 ஆம் ஆண்டு வெப்பம் அதிகமாகவே இருக்கிறது... சென்னை சாலைகள் நண்பகலில் வெறிச்சோடி காணப்படுகின்றன...

காரிலும் வீட்டிலும் நிறைய தண்ணீர் பாட்டில்கள் இருக்கிறது... ஏன் தண்ணீர் பாட்டில் குடிக்க கொடுத்து... வாங்கி வைக்க வேண்டும்? அவர்களிடமே தண்ணீர் பாட்டில்களை கொடுத்தால் இன்னும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றியது...

தினமும் இரண்டு பாட்டில்களில் நல்ல தண்ணீர் பிடித்து ஃப்ரிட்ஜில் போட்டு விடுகிறேன்... மதியம் ஸ்விகியில் இருந்து டெலிவரி செய்ய யார் வந்தாலும்... பத்து ரூபாய் பணமும் ஐஸ் வாட்டர் பாட்டிலும் கொடுத்து விடுகிறேன்... 😍

இதற்குப் பெரிய மெனக்கடலெல்லாம் இல்லை... கொஞ்சம் மனசு வைத்தால் செய்ய முடியும்... 😍

இதே சென்னையில இது போல வெயில்ல நான் கஷ்டப்படும் போது நிறைய பேர்.... வெவ்வேறு விதமான வகையில் எனக்கு உதவி செய்து இருக்கிறார்கள்.. 😍

எறும்பு சாப்பிடும்னு தெருவில் அரிசி கோலம் எல்லாம் போடறீங்க இல்ல... நட்ட நடு வெயில்ல சம்பளத்துக்கு வேலை செஞ்சாலும் இந்த கடுமையான வெயில்ல நமக்காக வந்து ஒரு மனுஷன் நிக்கிறானே.. அவனுக்கு தண்ணி கொடுக்கலாம் இல்ல... ?எங்கள மாதிரி ஐஸ் வாட்டர் பாட்டில் எல்லாம் கொடுக்க வேண்டாம்... அட்லீஸ்ட் சாப்பாடு பை வாங்கும் போது சொம்புல கொஞ்சம் தண்ணியாவது குடுங்க...

இந்த போஸ்ட் படிச்ச யாராவது ரெண்டு பேர் தண்ணி கொடுத்தா கூட பெரிய விஷயம் தான்.. அதுக்கு தான் இந்த போஸ்ட் எழுதினேன் 😍

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

#chennai #chennaihotwaves #water #helpingpeople #help

3 months ago | [YT] | 89

Jackie Cinemas

ஹலோ ரிசப்ஷன்..?

சொல்லுங்க...

சுடு தண்ணிக்கு எந்த பக்கம் திருப்பணும்?

லெப்ட்...

லெஃப்ட் பக்கம் திறந்தும் வரலையே?

சோலார்ல கனெக்ட் பண்ணி வச்சிருக்கோம் சார்... ஒரு 1 ½ பாக்கெட் தண்ணி வேஸ்ட் பண்ணா தான் சுடுதண்ணி வரும்....

அந்த ஒன்றரை பக்கெட் பச்ச தண்ணியை வேஸ்ட் செய்து... சுடு தண்ணி பிடிக்க கடுப்பாக இருக்கும்...

சென்னையில் முதன்முதலாக குமரன் காலணியில். 2000 ஆம் ஆண்டில் ராஜாங்கம் மத்திய வீதியில் 1200 ரூபாய்க்கு ஹாஸ்பிடாஸ் ஓட்டு வீட்டில் குடித்தனம்... என் வாழ்வில் முதல் வாடகை வீடு என்று கூட சொல்லலாம்... அந்த ஏரியாவில் தண்ணி பிரச்சனை பெரும் பிரச்சனை...

இரவு 12 மணிக்கு குடி தண்ணீர் லாரி வரும்... அடித்து பிடித்து ஐந்து குடங்கள் பிடித்தால் தான்.... அன்றைய நாள் சுபிட்சமாக இருக்கும்...

நள்ளிரவில்
கண் இழுத்துக் கொண்டு போகும் போது .... இரண்டு மணிக்கு..லாரி வந்து விட்டது... லாரி வந்து விட்டது என்று அலறல் சத்தம் கேட்டதும்.... குடமும் கையுமாக போய் தண்ணி பிடித்தது ஞாபகத்தில் வரும்...

இதற்கு பிரபலமான ஒரு சாட்சி இருக்கிறது... எனது எதிர் வீட்டில்.... இப்போது பிரபலமாக இருக்கும் எம் சுகுமார் கேமராமேன் அப்போது அவர் அண்ணன் ஜீவனோடு இணைந்து புகைப்படக்காரராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம்...

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒரு குடம் தண்ணீர் பிடித்ததை நினைக்கும் போது...

சுடுதண்ணிக்காக ஒன்றைய பக்கெட் இரண்டு பக்கெட் பச்சை தண்ணியை வேஸ்ட் செய்வதில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை....

நிறைய நேரம் தண்ணியை வேஸ்ட் செய்யாமல் அப்படியே பச்ச தண்ணீரில் நடுங்கும் குளிரில் குளித்து விடுவேன்...

வியட்நாமில் மூவன்பிக் ஓட்டலில் தங்கி இருந்தபோது... சக்குசியோ? பக்குசியோ? டார்லிங் டார்லிங் கலாப்பட்டி சிங்காரம் போல.... ஒரே ஒரு நாள் தான் பாத்டாபில் குளித்தேன்.... ஒரு ஆளுக்கு, குளிக்க இவ்வளவு தண்ணீர் வேஸ்ட் ஆகின்றதே, என்பதால்... அதன் பிறகு சக்குசியை யூஸ் செய்யவில்லை....

ம்....
சொல்ல மறந்துட்டேன்... சுடு தண்ணிக்காக
இன்று தென்காசியில் ஒன்றரை பாக்கெட் பச்சை தண்ணியை வேஸ்ட் செய்தேன் 😍

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 😍

#tenkasi #memorablemoments #memoriesforlife #chennai #water

4 months ago | [YT] | 47

Jackie Cinemas

#maidaanmovie
நாங்க காதலிக்கும் போது எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்னன்னா ? என் பொண்டாட்டிக்கு அஜய் தேவ்கான் புடிக்கும்ன்னு சொன்னதுதான்...😀

என்னால ஏத்துக்கவே முடியாத விஷயம் ... 😭.எப்படி அவன போய் பிடிக்கும் ? அப்படி என்றது தான்? ...

எப்பவுமே தூங்கி எழுந்தது போல ஒரு முகம்... கலையாவும் இருக்காது ...ஆனா எப்படி பிடிக்கும் என்பதுதான் என் மில்லியன் டாலர் கேள்வியா இருந்துச்சு....

சரி ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு ரசனை அப்படின்னு மனச தேத்திக்கிட்டேன்....

அடுத்து மிகப்பெரிய குண்ட தூக்கி . போட்ட செய்தி ஒன்னு வந்தது....😀
காஜோல்... அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.... திருமணமும் செய்துவிட்டார் என்ற அந்த செய்தி தான் 😂

முன்னாடி எல்லாம் சுத்தமாவே பிடிக்காது.. அதுக்கு அப்புறம் ரொம்ப ரொம்ப சுத்தமாகவே பிடிக்காமல் போச்சு...
காஜோலுக்கே அந்த தூங்குமூஞ்சியை பிடிக்கும் போது.... ஏன்? என் மனைவிக்கு பிடிக்க கூடாது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்😂

சமீபத்தில் அஜய் தேவ்கான் மாதவன் நடித்த சைத்தான் படம் தான் சமீபத்தில் திரையில் பார்த்த படம் என்று சொல்லலாம்... அதற்கு முன் ரைட் திரைப்படம் என்று நினைக்கிறேன் அவ்வளவுதான்..

அடுத்து இந்த மைதான் திரைப்படம்... உண்மையில் அமைதியாக சட்டுலாக தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்...

1952 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்த ரஹீம் சாப் என்பவரைப் பற்றிய உண்மை கதை...

அந்த 10 ஆண்டுகளில் இந்திய கால்பந்தாட்ட குழுவை ஆசியாவின் பிரேசில் என்று அழைக்க காரணமாக இருந்தவர்...

படத்தின் இயக்குனர் அமித் சர்மா 900 படங்களுக்கு மேல் விளம்பர படங்கள் எடுத்தவர்... 2018 ஆம் ஆண்டு வெளியான பதா ஹோ திரைப்படத்தின் இயக்குனரும் அவரே...

கடைசி அரை மணி நேரம் ரகுமானும் இயக்குனரும் கேமராமேனும் பூந்து விளையாடி இருக்கிறார்கள்... கண்களை குளமாக்கும் நெகிழ்ச்சியாக்கும் நிறைய காட்சிகள் இருக்கிறது. அற்புதமான ஸ்போர்ட்ஸ் திரைப்படம் டோன்ட் மிஸ்...

இதனால் நான் சொல்ல வரும் கருத்து 😀😀 அஜய் தேவ்கானை எனக்கும் பிடித்து விட்டது இந்த மைதான் படத்தின் மூலம்....😂😂😂
https://youtu.be/jG-umRU7GZc
#maidaanmovieajaydevgn #maidaan #maidaanmoviereview #ajaydevgnmaidaanmoviesong #ajaydevgan #moviereview #jackiecinemasreview #jackiesekarreview
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்

4 months ago | [YT] | 69

Jackie Cinemas

This week three Malayalam films....released this week..
which movie will see first ????
#Aavesham
#VarshangalkkuShesham
#JaiGanesh
share your comments ....

4 months ago (edited) | [YT] | 35

Jackie Cinemas

Rockstar மனோ special | SUPER SINGER 10 | EPISODE 21 | Review | Jackie TV | Jackiesekar
supersinger #season10 #sivakarthikeyan #singermano #johnjerom #jeevithaa #vigneshraja #vijaytelevision #priyankadeshpande #makapa #bestsong
▶️🔗https://youtu.be/-plzvVHZ_04

5 months ago | [YT] | 4